International Women’s Day
Posted by Admin on 13th March 2019

டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கம் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கோலப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் கலை நிகழ்ச்சிகளை 10-03-2019 அன்று டோம்பிவிலி மேற்கில் உள்ள தென் இந்தியப் பள்ளியில் வைத்து நடத்தியது. இதில் திராளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஓவியப் போட்டி இரண்டு பிரிவாக நடைபெற்றது. மாஸ்டர் திரு. செல்வராஜ் அவர்கள் நடுவராக இருந்து வெற்றி பெற்றவர்களைத் தேர்ந்தெடுத்தார்.
இளையவர்கள் பிரிவு
முதல் பரிசு: சுனில் குமார்
இரண்டாம் பரிசு: அனுஸ்ரீ பெங்களூரு
பெரியவர்கள் பிரிவு
முதல் பரிசு: கிருபா ஜெயசங்கர்
இரண்டாம் பரிசு: வர்ஷனி வெங்கடேஷ்

கோலப் போட்டியும் இரண்டு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களை திருமதி வனஜா இராமச்சந்திரன் மற்றும் திருமதி உமா இலக்ஷ்மனன் ஆகியோர் நடுவர்களாக இருந்து தேர்ந்தெடுத்தனர்.
இளையவர்கள் பிரிவு
முதல் பரிசு: இலாவண்யா முரளி
இரண்டாம் பரிசு: வர்ஷனி வெங்கடேஷ்
பெரியவர்கள் பிரிவு
முதல் பரிசு: இரம்யா முரளி
இரண்டாம் பரிசு: மல்லிகா

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.

