மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாள் விழா
Posted by Admin on 9th January 2020
பேரன்புடைய தமிழர்களே! மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாள் விழாவில் பாட்டுப்போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி & ஓவியப் போட்டி ஆகியவற்றை பாரதி மெடிக்கல் & ரிசர்ச் பவுண்டேஷன் – மும்பை துணையுடன் திரு. ராம்குமார் சேஷன் (Shri. Ramkumar Seshan, DGM – Instrumentation, Tecnimont Pvt. Ltd.) அவர்களின் தலைமையில் நமது டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கம் நடத்துகின்றது. இவ்விழாவில் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு பரிசுகளை வென்று செல்லுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
கட்டுரைப் போட்டி
தலைப்பு: பாரதியின் மொழி ஆளுமை
நடுவர்: திருவாட்டி. தேவராணி பிரேமானந்த்
இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் கட்டுரை எழுதுதல் (சிறியோர் முதல் பெரியோர் வரை)
பேச்சுப் போட்டி
தலைப்பு: பாரதியின் சமூக பார்வை
நடுவர்: திருவாட்டி. ரேவதி பார்த்தசாரதி
(மூன்று பிரிவினருக்கும்)
பாட்டுப் போட்டி
நடுவர்: திருவாட்டி. சித்ரா கணேசன்
பாரதியார் இயற்றிய பாடல்களில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்து பாட வேண்டும்.
(மூன்று பிரிவினருக்கும்)
மூன்று பிரிவுகள்
- 3 – 5-ஆம் வகுப்பு மாணவர்கள்
- 6 – 9-ஆம் வகுப்பு மாணவர்கள்
- 10 – 12-ஆம் வகுப்பு மாணவர்கள
ஓவியப் போட்டி
நடுவர்: ஓவியர் திரு. செல்வராஜ்
ஓவியப் போட்டிக்கான விதிமுறைகள்
- 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் சிரார்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
- போட்டி ( 1-5 & 6-10-ஆம் வகுப்பு) இரு பிரிவாகப் பிரித்து நடைபெறும்.
- போட்டி 45 நிமையங்கல் மட்டுமே நடைபெறும்.
- போட்டியில் கலந்து கொள்ளும் சிறார்கள் தங்களுக்குத் தேவையான வண்ணங்களை தாங்களே கொண்டு வர வேண்டும்.
- சங்கம் தரும் தாள்களில்தான் ஓவியம் வரைய வேண்டும்.
- ஓவியப் போட்டிக்கான தலைப்பு போட்டியின் போது தரப்படும்.
இடம்: தென் இந்தியப் பள்ளி, தொடர் வண்டி நிலையம் அருகில், டோம்பிவிலி (மேற்கு)
நாள்: 12.01.2020
கிழமை: ஞாயிறு
பொழுது: மாலை 5.00 முதல் 8.00 மணி வரை
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் 10.01.2020 வெள்ளிக் கிழமைக்குள் 9987646576, 7208785820, 9969478017, 9820030865, 9987646576 என்ற எண்களில் முன் பதிவு செய்து கொள்ளவும்.
குறிப்பு: போட்டி குறிப்பிட்ட நேரத்தில் துவங்கப்படும்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.