மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாள் விழா
Posted by Admin on 6th December 2018

பேரன்புடைய தமிழர்களே மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாள் விழாவினை பாரதி மெடிகல் – ரிசர்ச் பவுண்டேஷன், மும்பை துணையுடன் நமது டோம்பிவிலி தமிழ் மக்கள் சங்கம் கொண்டாடுகிறது. இந்த விழாவில் பாரதியாரைப் பற்றிய போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இதில் அனைத்து மாணவர்களும் பெருவாரியாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
பாட்டுப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளும் நடைபெறவிருக்கின்றன.