பொதுக்குழு மற்றும் வளரும் கலைஞர்கள் நிகழ்ச்சி
Posted by Admin on 31st December 2024
சிறுவர்களின் தனித்திறனை வெளிக் கொணரும் நிகழ்ச்சி
இடம்: தென்னிந்தியப் பள்ளி, தொடர் வண்டி நிலையம் அருகில், டோம்பிவிலி (மேற்கு)
நாள்: 05-01-2025, ஞாயிற்றுக் கிழமை, மாலை 4 மணி
தலைமையுரை: திரு. வெ. இராசேந்திரன்
வரவேற்புரை: திரு. கி. வெங்கடேசு
நன்றியுரை: திரு. இரமேசுபாபு
இப்பொதுக்குழு கூட்டத்தில் சங்கத்தின் கடந்த ஆண்டு வரவு செலவு கணக்கு ஒப்புவித்தல் குறித்தும் நிகழ் ஆண்டின் தணிக்கையாளரை நியமிப்பது குறித்தும் சங்கத்திற்கு புதிய அலுவலகம் வாங்குவது குறித்தும் இன்னும் பல செயல்கள் குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
தொடர்ந்து சிறார், மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணர்ந்து ஊக்குவிக்கும் வண்ணம் வளரும் கலைஞர்கள் நிகழ்ச்சியை சங்கம் நடத்துகின்றது. இதில் சங்கச் சிறார்கள் பங்கு கொண்டு அவரவர் தனித்திறன்களான பேச்சு, ஆடல், பாடல், இசைக்கருவி மீட்டல், இன்ன பிற என மேடையில் செய்து காட்டி தம் திறனை வெளிப்படுத்தலாம்.
குறிப்பு:
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிற ஒவ்வொருவருக்கும் தலா 4 நிமையங்கள் வழங்கப்படும். பங்கேற்பாளர்கள் தகுந்த ஏற்பாடுகளுடன் வரவும். பங்கேற்க விரும்புவோர் 03-01-2025 வெள்ளிக் கிழமைக்குள் தங்கள் பெயரை 98200 30865, 88985 52447, 97690 00983 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்யவும்.
இரவு உணவு உண்டு